தும்பிக்கை இல்லாமல் சுற்றி வரும் 2வயது யானைக்குட்டி.

கோவைமாவட்டம் வால்பாறை அருகே அண்டை மாநிலமான கேரளா அதிரப்பள்ளி ரெட்வில் மலை பகுதியில் சுமார் 2வயது மதிக்க தக்க யானை குட்டி ஒன்று தனது தாயுடன் சுற்றி வருகிறது
இதனை கண்ட பொது மக்களும் சுற்றுலா பயணிகளும் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.
அதிசயமாக யானை குட்டிக்கு தும்பிக்கை இல்லாதது அரிய நிகழ்வு ஆகும் என்பதால் வனத்துறையினர் அதனை சிறப்பாக கவனித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளும் குட்டியானை அருகே சென்று செலஃபீ எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.தும்பிக்கையில்லாத யானைக்குட்டி இணையத்திலும் வலம் வருவதால் பொதுமக்கள் தும்பிக்கை இல்லாத யானை குட்டியை சுற்றுலாப்பயணிகள் பெரும் ஆச்சரியத்தோடு பாரத்துசென்றவண்ணமுள்ளனர்.
Tags :