திமுக- காங்கிரஸ் கூட்டணி எந்தெந்த தொகுதிகள் இன்று உடன்பாடு.

by Editor / 18-03-2024 09:40:12am
திமுக- காங்கிரஸ் கூட்டணி எந்தெந்த தொகுதிகள் இன்று உடன்பாடு.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அவை எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து உடன்பாடு சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது. கடந்தமுறை போட்டியிட்ட கன்னியாகுமரி, கரூர், ஆரணி, தேனி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் உள்ளிட்ட 7 தொகுதிகள் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. விருதுநகர் மற்றும் திருச்சி தொகுதிகளுக்கு பதிலாக வேறு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது

 

Tags : திமுக- காங்கிரஸ் கூட்டணி

Share via

More stories