நாகர்கோவிலில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சம்பவத்தன்று தம்மத்துக்கோணம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த பர்தீப்குமார் (வயது 23) என்பதும், அவர் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 60 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் கோட்டார் கஸ்தூரி நகரை சேர்ந்த சுரேஷ் (46) என்பவரிடம் இருந்து 95 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அவரையும் கைது செய்தனர்.
Tags :