ஒரு ஆண் நண்பருடன் 3 பெண்கள் சுற்றுலா.. 3பேர் கைது

by Editor / 25-04-2025 04:11:25pm
ஒரு ஆண் நண்பருடன் 3 பெண்கள் சுற்றுலா.. 3பேர் கைது

தேனி மாவட்டம் ஜி.கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்த நந்தினி, லாவண்யா மற்றும் அனிதா ஆகியோர் ஆண் நண்பருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது, மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி, அவர்களிடமிருந்து நகையை பறித்து சென்றுள்ளார். இதையடுத்து, போலீசார் விசாரணையில் கள்ளக்காதலன் சாந்தகுமாருடன் சேர்ந்து நந்தினியும், லாவண்யாவும் திட்டம் தீட்டி நகையை பறிப்பதற்காக அனிதாவை கொடைக்கானலுக்கு அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, மூவரும் கைது செய்யப்பட்டனர். 
 

 

Tags :

Share via

More stories