2 கிலோ கஞ்சா பறிமுதல் - எஸ். பி தனிப்படை அதிரடி கைது

by Editor / 25-04-2025 03:03:12pm
2 கிலோ கஞ்சா பறிமுதல் - எஸ். பி தனிப்படை அதிரடி கைது

திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் கஞ்சா விற்பனையை ஒழிக்க மாவட்ட கண்காணிப்பாளர் பிரதீப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில் மாவட்ட கண்காணிப்பாளர் தனிப்படை போலீசாருக்கு வேடசந்தூர் பகுதியில் அசாம் மாநில கஞ்சா கைமாறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அதிரடி தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேடசந்தூர் அருகே விட்டல் நாயக்கம்பட்டி தனியார் நூற்பாலை அருகே இரண்டு கிலோ அசாம் மாநில கஞ்சாவை வைத்திருந்த அரியலூர் பித்தம்பட்டியை சேர்ந்த நீலக்கண்ணன் (வயது 50) என்பவரை கைது செய்து வேடசந்தூர் காவல் ஆய்வாளர் வேலாயுதம் அவர்களிடம் ஒப்படைத்தனர். கஞ்சா சப்ளை செய்த வடமாநில நபர் தப்பி ஓடினார். பின்பு விசாரணையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த யசோபந்த் சகோ என்பவரிடமிருந்து கஞ்சாவை வாங்கி தனியார் நூற்பாலையில் பணிபுரியும் வடமாநில நபர்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததாக ஒப்புக்கொண்டார். பின்பு நீலகண்ணன் மீது வேடசந்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய அசாம் மாநிலத்தில் இருந்து கஞ்சா சப்ளை செய்த யசோபந்த் சகோ என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
 

 

Tags :

Share via