ஜெயலலிதாவின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

by Admin / 24-02-2024 03:39:02pm
ஜெயலலிதாவின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு கோவில்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அருகேயுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திரு உருவச்சலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அறிவுறுத்தல் பேரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திரு உருவச்சலைக்கு நகரச் செயலாளர் விஜய பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், எம்ஜிஆர் இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் அம்பிகை பாலன், வழக்கறிஞர் அணி மாவட்டச் செயலாளர் சங்கர் கணேஷ், கலை இலக்கியப் பிரிவு மாவட்ட செயலாளர் போடு சாமி, மாணவரணி ஒன்றிய இணைச் செயலாளர் விக்னேஷ், மகளிர் அணி மாவட்ட செயலாளர் பத்மாவதி, மகளிர் அணி மாவட்ட இணை செயலாளர் ஜெயந்தி, அதிமுக நிர்வாகிகள் சண்முக கனி, பழனி முருகன், வெங்கடேஷ், பழனி குமார், கொங்ராஜ்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via