உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மகாதேவன் பெயர் கொலிஜியம் பரிந்துரை.

by Editor / 12-07-2024 12:03:15am
உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மகாதேவன் பெயர் கொலிஜியம் பரிந்துரை.

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவனை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் தலைமை நீதிபதி கோட்டீஸ்வர் சிங்கை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கவும் கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 2 இடங்களை நிரப்புவதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான ஒய்.எஸ்.சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் இருவரையும் பரிந்துரைத்துள்ளது.

 

Tags : உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்

Share via