1 ஆம் வகுப்பு முதல் தாய்மொழிப் புலமை: கேரள அரசு அதிரடி

by Staff / 03-05-2024 01:52:18pm
1 ஆம் வகுப்பு முதல் தாய்மொழிப் புலமை: கேரள அரசு அதிரடி

தாய்மொழி ஆர்வலர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், கல்வியின் தொடக்கத்திலிருந்தே கல்வியறிவை உறுதி செய்வதற்கும், கேரள அரசு புதிய பள்ளிப் பாடத்திட்டத்தினை அறிமுகம் செய்கிறது. பள்ளிப்படிப்பின் அடிப்படை ஆண்டுகளில் தாய்மொழிப் புலமைக்கு முன்னுரிமை அளிப்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது. தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மலையாளம் கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது.குழந்தைகள் பள்ளியில் படிக்கும் முதல் ஆண்டு முடிவதற்குள் தாய்மொழியில் எழுதவும் படிக்கவும் திறன் பெற்றிருக்க வேண்டும். வரும் கல்வியாண்டில் புதிய பாடப் புத்தகங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த அணுகுமுறையில் ஒருங்கிணைந்த ஆசிரியர்களுக்கான பயிற்சி, அடுத்த வாரம் தொடங்கப்படுகிறது.

 

Tags :

Share via