பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி காவல்துறை விசாரணை.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 31 ஆம் தேதி மாலை 6:20 மணி அளவில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் 24 பெட்டிகளோடு சென்னை நோக்கி புறப்பட்டது இந்த ரயிலை மாடசாமி என்கின்ற ஓட்டுனர் இயக்கினார் ரயில் கடையநல்லூர் ரயில் நிலையத்தை தாண்டி சங்கரன்கோவில் தடத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது போக நல்லூர்-காக்க நல்லூருக்கு இடையே தண்டவளத்தில் இரண்டு பாரங்கற்கள் ரயில் தடத்தில் தண்டவாளத்தில் இடது பகுதியில் கிடப்பதைக் கண்ட ரயில் ஓட்டுநர் மாடசாமி ரயிலை நிறுத்தி கற்களைகொட்டும் மழையில் அகற்றினார். பின்னர் ஐந்து நிமிடம் தாமதமாக அங்கிருந்து ரயிலை சங்கரன்கோவில் நோக்கி இயக்கியுள்ளார் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கும் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கும் அவர் தகவல் தெரிவிக்கவே ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ஏற்கனவே கடந்த மாதம் 25.9.2024 அன்று பாம்பு கோயில் சந்தை பகுதியில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவளத்தில் வடநாட்டு இளைஞர்கள் இரண்டு நபர்கள் பாடங்கற்களை வைத்ததில் ரயில் முன்பகுதி சேதமடைந்த நிலையில் இரண்டு நபர்களை ரயில்வே போலீசார் கைது செய்தனர் சம்பவத்துக்கு இடையே மீண்டும் அதே தடத்தில் தற்பொழுது கற்கள் வைக்கப்பட்டுள்ள சம்பவம் ரயில்வே அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க திட்டமிட்டு முயற்சிகள் நடைபெற்று வருகிறதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர். ரயில்வே ஓட்டுநர் ராமசாமி சாமர்த்தியமாக ரயிலில் நிறுத்தி கற்களை அகற்றியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
Tags : பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி காவல்துறை விசாரணை.