கஞ்சா கடத்திய 2பேருக்கு 12 வருட சிறைத்தண்டனை தலா 1லட்ச ரூபாய் அபராதம்.

மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினர் கடந்த 2018ம் ஆண்டு 212கிலோ கஞ்சா வணிக ரீதியில் கடத்தி விற்பனை செய்த வழக்கில் தேனி கம்பம் பகுதியை சேர்ந்த சிவா, ஆனந்த் ஆகியோரை கைது செய்தனர்.இந்த வழக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் குற்றம் நிருபிக்கப்பட்டு இருவருக்கும் 12வருட சிறைத்தண்டனை தலா 1லட்ச ரூபாய் அபராதம் விதித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிஹரகுமார் உத்தரவிட்டார்.
Tags : கஞ்சா கடத்திய 2பேருக்கு 12 வருட சிறைத்தண்டனை தலா 1லட்ச ரூபாய் அபராதம்.