சிறுமிக்கு பாலியல் தொல்லை... பெட்டிக்கடை உரிமையாளர் போக்சோவில் கைது

by Editor / 20-10-2021 11:24:46am
 சிறுமிக்கு பாலியல் தொல்லை... பெட்டிக்கடை உரிமையாளர் போக்சோவில் கைது

விருதுநகர் மாவட்டம் சிவகாசி புதுத் தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகம் (45). இவர் தனது வீட்டில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியின் 8 வயது மகள், கடையின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது, ஆறுமுகம் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், ஆறுமுகம் மீது சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, ஆறுமுகம் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது. இதனை அடுத்து, பெட்டிக்கடை உரிமையாளர் ஆறுமுகத்தை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories