நபிகள் நாயகம் பற்றி அவதூறு: பாஜக நிர்வாகி கைது.

திருப்பூர்: நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பதிவிட்ட திருப்பூர் பாஜக ஊடக பிரிவு மண்டல செயலாளர் நந்தகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.குன்னத்தூர் முதல்வர் என்ற முகநூல் பக்கத்தில் பாஜக ஊடக பிரிவு ஊத்துக்குளி மண்டல செயலாளர் நந்தகுமார் அவதூறு பதிவு செய்துள்ளார்.குன்னத்தூர் முதல்வர் என்ற முகநூல் பக்கத்தில் நபிகள் நாயகம் குறித்து நந்தகுமார் ஆபாசமாக பதிவிட்டுள்ளார்.அவதூறு பதிவு பற்றி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் திருப்பூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
Tags : நபிகள் நாயகம் பற்றி அவதூறு: பாஜக நிர்வாகி கைது