“கைகொடுத்த நான் முதல்வன் திட்டம்” - உதயநிதி மகிழ்ச்சி

UPSC சிவில் சர்விஸ் தேர்வில் தமிழகத்தில் இருந்து தேர்ச்சி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். UPSC தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 139 மாணவர்களில் 54 பேர் தேர்ச்சி அடைந்துள்ளதாக பெருமிதம் கூறியுள்ளார். இந்த திட்டம் மூலம் ஆண்டுதோறும் 10 லட்சம் மாணவர்களுக்கு அவர்களது திறமையை வளர்க்க உதவும் வகையில் திறன் பயிற்சியை வழங்கி வருகிறது.
Tags :