கேரளாவில் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்த இரண்டு நபர்கள் கைது 

by Editor / 01-03-2024 04:50:39pm
கேரளாவில் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்த இரண்டு நபர்கள் கைது 

தமிழகத்தில் எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை வழியாக கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் வாங்கி வரப்படுவதாக போலீசார்க்கு  கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து காவல்துறை உதவி ஆய்வாளர் தீபன் குமார் தலைமையில்  புளியரை  காவல்துறை சோதனை சாவடியில் தணிக்கையில் ஈடுபட்டினர்,இதன்  தொடர்ச்சியாக செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவர் அரசு பேருந்தில் லாட்டரி சீட்டுகள் வாங்கி வந்தது கண்டறியப்பட்டது அவரிடமிருந்து 170 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன, இதில் மதிப்பு 7 ஆயிரத்து 800. ரூபாய் ஆகும். இதே போன்று ஆலங்குளம் பகுதி சேர்ந்த மேல குத்த பாஞ்சான் பகுதியைச் சார்ந்த அர்ஜுனன் என்பவர் அரசு பேருந்தில் வாங்கி வந்த 5500 ரூபாய் மதிப்புள்ள 132 லாட்டரி சீட்டுக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர் செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளையும் இரண்டு நற்பணி நபர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

 

Tags : கேரளாவில் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்த இரண்டு நபர்கள் கைது 

Share via

More stories