இந்தியாவிடம் 60 நாட்களுக்கு தேவையான எரிபொருள் மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான எல்.பி.ஜி கையிருப்பில் உள்ளது.

by Admin / 27-03-2026 02:09:46am
இந்தியாவிடம்  60 நாட்களுக்கு தேவையான எரிபொருள் மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான எல்.பி.ஜி கையிருப்பில் உள்ளது.

இந்தியாவிடம் தற்போது சுமார் 60 நாட்களுக்கு தேவையான எரிபொருள் மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான எல்.பி.ஜி கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது .இருப்பினும், கோவா மற்றும் தெலுங்கானா போன்ற பகுதிகளில் சமூக வலைதளங்களில் பரவிய தவறான தகவல்களால் மக்கள் ஒரே நேரத்தில் பெட்ரோல் நிலையங்களில் குவிந்தனர். இதனால் சாதாரண நாட்களை விட இரண்டு முதல் மூன்று மடங்கு விற்பனை அதிகரித்தது. இது சில நிலையங்களில் தற்காலிகமாக கையிருப்பு தீர காரணமாகவும் அமைந்தது. எண்ணெய் நிறுவனங்கள் டீலர்களுக்கு வழங்கி வந்த கடன் வசதியை குறைத்து முன்பணம் செலுத்தும் முறைக்கு அண்மையில் மாறின. இதனால் சிறிய அளவிலான பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் உடனுக்குடன் கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு கையிருப்பு இல்லை என பலகைகள் வைத்தன. மேற்கு ஆசிய போர் சூழலால் ஹோமுஸ் நீரிணை பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது இருப்பினும் மாற்று வழிகள் மூலம் இந்தியா 41 நாடுகளில் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணையை பெற்று வருவதாக தெரிவித்துள்ளது. கோவா முதலமைச்சர் பிரமோத் மற்றும் தெலுங்கானா குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கையிருப்பு உள்ளதாகவும் மக்கள் பீதியடைய தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர். தற்பொழுது மத்திய அரசு பெட்ரோல் நிலையங்களுக்கான கடன் வசதி காலத்தை உயர்த்துவது போன்ற நடவடிக்கைகளின் மூலம் விநியோகத்தை சீர் செய்ய முற்பட்டுள்ளது..

இந்தியாவிடம்  60 நாட்களுக்கு தேவையான எரிபொருள் மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான எல்.பி.ஜி கையிருப்பில் உள்ளது.
 

Tags :

Share via

More stories