காஸா மக்களின் இன அழிவை தடுத்து நிறுத்துங்கள்
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட போர் சூழல் நிலவி வரும் நிலையில், வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மடூரோ, “மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, எரிபொருள் இல்லை. அனைத்து வாயில்களும் மூடப்பட்டு, காஸா தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டுவருகிறது. உலகம் இனியாவது இதுகுறித்துப் பேச வேண்டும். காஸா மக்களின் இன அழிவை தடுத்து நிறுத்த வேண்டும். பாலஸ்தீன மக்களை இன அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும். கிறிஸ்துவ உலகம், இஸ்லாமிய உலகம், யூத உலகம், என எல்லோரும் பேச வேண்டும். இப்போதாவது பேசுங்கள்” என தெரிவித்துள்ளார்.
Tags :