இந்தியாவில் புதுச்சேரி மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது- தமிழிசை சௌந்தரராஜன்

by Editor / 29-03-2023 08:28:18am
இந்தியாவில் புதுச்சேரி மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது- தமிழிசை சௌந்தரராஜன்

தூத்துக்குடி விமான நிலையத்தில் கவர்னர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி:
 எல்லா இடங்களிலும் நல்லது நடக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து இந்தியாவில் புதுச்சேரி மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது.புதுச்சேரி அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டு வருகிறது, பாண்டிச்சேரியில் மகளிர்க்கான ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு கொடுத்தும் கொண்டு இருக்கிறோம். தமிழகத்தில் இப்பொழுது அறிவித்திருக்கிறார்கள் செப்டம்பர் மாதம் தான் கொடுக்கிறதாக கூறியுள்ளனர்.புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட போன்ற நல்ல திட்டங்களில் நல்ல அம்சங்கள் உள்ளன ஆனால் தமிழகம் போன்ற சில மாநிலங்கள் இதை எதிர்த்து வருகின்றனர் பாரத பிரதமர் இந்தியாவின் வளர்ச்சிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo