2 தொகுதிகளில் போட்டியிடும் ஒடிசா முதல்வர்

by Staff / 18-04-2024 11:24:34am
2 தொகுதிகளில் போட்டியிடும் ஒடிசா முதல்வர்

ஒடிசா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பிஜு ஜனதா தள தலைவரும், ஒடிசா முதலமைச்சருமான நவீன் பட்நாயக் மீண்டும் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவர் தற்போது எம்எல்ஏவாக உள்ள ஹிங்கிலி தொகுதியுடன் பலங்கிர் மாவட்டத்தில் உள்ள காந்தபாஞ்சி தொகுதியிலும் போட்டியிடுகிறார். நவீன் பட்நாயக் கடந்த முறை இந்த இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். நவீன் பட்நாயக் கடந்த 2,000ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தொடர்ந்து 5 முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். மீண்டும் வெற்றிபெற்றால் இது மிகப்பெரிய சாதனையாக இருக்கும்.

 

Tags :

Share via