லாரி மோதியதில் கல்லூரி மாணவர் 2பேர் பலி

கோவை அம்மன் நகரைச் சேர்ந்த தியாகராஜனின் மகன் மாணிக்கம் (21). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் படித்து வந்த சேரன்மாநகரைச் சேர்ந்த சிவராஜ் என்பவரின் மகன் அருண்குமார் (19). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் விளையாட்டரங்கில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.அப்போதுகொண்டிருந்தனர். அப்போது எதிரே அதிவேகமாக வந்த லாரி ஒன்று இவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மாணிக்கமும், அருண்குமாரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து இருவரின் உடல்களையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து லாரி ஓட்டுநர் விஜயகுமார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :