UPSC சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு

2024ஆம் ஆண்டுக்கான UPSC சிவில் சர்வீசஸ் தேர்வின் இறுதி முடிவுகள் இன்று(ஏப்.22) வெளியாகியுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு மூன்று கட்டங்களாக நடத்தப்பட்ட இத்தேர்வில் 1,009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் உ.பி.,யைச் சேர்ந்த சக்தி துபே என்ற மாணவி முதலிடம் பிடித்தார். தமிழகத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் என்ற மாணவர் அகில இந்திய தரவரிசையில் 23ம் இடமும், தமிழக அளவில் முதலிடமும் பிடித்துள்ளார். இவர், 'நான் முதல்வன்' திட்டத்தில் பயிற்சி பெற்றவர் ஆவார்.
Tags :