ஜான் ஜெபராஜ்க்கு ஏப்ரல் ஏப்ரல் 25ஆம் தேதிவரை நீதிமன்றக்காவல்.

கோயம்புத்தூரில் உள்ள தனது வீட்டில் வைத்து 17 வயது மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த ஜான் ஜெபராஜை போலீசார் இன்றுஅதிகாலை மூணாரில் வைத்து கைது செய்தனர். தொடர்ந்து, 5 மணி நேரமாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது போலீசார் அவரை, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.ஏப்ரல் 25ஆம் தேதிவரை நீதிமன்றக்காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.இதனைத்தொடர்ந்துஅவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags : ஜான் ஜெபராஜ்க்கு ஏப்ரல் ஏப்ரல் 25ஆம் தேதிவரை நீதிமன்றக்காவல்.