விதிமுறைகளை மீறிய தவெக கட்சிதொண்டர்கள்.

மதுரையில் இன்று (ஆகஸ்ட் 21) நடக்க இருக்கும் தவெக கட்சியின் 2-வது மாநில மாநாட்டில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கான தொண்டர்கள் படையெடுத்துள்ளனர். இந்நிலையில், மாநாட்டிற்கு வந்த சில தொண்டர்கள் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், அவர்களின் பைகளை போலீசார் பரிசோதனை செய்தபோது மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மது பாட்டில் ஒன்று கீழே விழுந்து உடைந்துள்ளது. இதையடுத்து, அவர்களை கோயிலுக்குள் அனுமதிக்காமல் போலீசார் தடுத்துள்ளனர்.
மாநாட்டுத் திடலுக்குள் போலீஸ் வாகனங்களைத் தவிர வேறு எந்த வாகனங்களுக்கும் அனுமதியில்லை என கட்சி தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சிலர் இந்த உத்தரவை மீறி ஆம்புலன்ஸ் வாகனத்தைப் பயன்படுத்தி உள்ளே நுழைய முயற்சித்துள்ளனர். ஆம்புலன்ஸை நிறுத்திச் சோதனையிட்ட போலீஸார் உள்ளே 4 இளைஞர்கள் இருந்ததைக் கண்டனர். அவர்களை ஆம்புலன்ஸிலிருந்து இறக்கிவிட்டு நடந்து செல்ல அறிவுறுத்தினர்.
Tags : விதிமுறைகளை மீறிய தவெக கட்சிதொண்டர்கள்.