த.வெ.க மாநாடு திடலில் திரண்ட தொண்டர்கள்..

மாநாட்டை முன்கூட்டியே தொடங்க திட்டம்.
நள்ளிரவு முதலே தொண்டர்கள் குவிந்து வருவதால் மதுரை மாநாட்டை முன்கூட்டியே தொடங்க தவெக திட்டமிட்டுள்ளதாக தகவல்.மாலை 4 மணி முதல் 7 மணி வரை மாநாட்டை நடத்த தவெக திட்டமிட்டிருந்தது.
கண்ணீர் விட்ட கர்ப்பிணி
புதுக்கோட்டை: தவெக மாநாட்டில் கர்ப்பிணிகள், குழந்தைகள் பங்கேற்க வேண்டாம் என விஜய் அறிவித்திருந்த நிலையில் தனது மகனுடன் புறப்பட்ட கர்ப்பிணி பெண்.
மாநாட்டிற்கு வர வேண்டாம் என நிர்வாகிகள் வலியுறுத்தியும் எப்படியாவது விஜயை பார்த்தாக வேண்டும், தனக்கு ஒன்றும் நிகழாது என கண்ணீர் விட்ட பெண்.
த.வெ.க மாநாடு திடலில் திரண்ட தொண்டர்கள்
தற்போது இருந்தே திடலில் அமர இருக்கை பிடிக்கும் தொண்டர்கள்
100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு
விஜயை ரசிகர்கள் நெருங்காத வகையில் தடுப்புக் கம்பிகள் அமைப்பு
நிழலை தேடும் தவெக தொண்டர்கள்
தவெக மாநாடு நடைபெறும் பாரபத்தியில் கொளுத்தும் வெயில்.
வெயிலின் தாக்கம் காரணமாக நாற்காலிகளுடன் நிழலை தேடி செல்லும் தவெக தொண்டர்கள்.
காலியாக கிடக்கும் திடல்
தவெக மாநாட்டு திடலில் பாதியளவுக்கு மட்டுமே போடப்பட்டுள்ள இருக்கைகள்.
கடைசி நேரத்தில் ஒப்பந்ததாரர்கள் பின் வாங்கியதால் காலியாக கிடக்கும் திடல்.
Tags : த.வெ.க மாநாடு திடலில் திரண்ட தொண்டர்கள்..