நெல்லை,த்துக்குடி மாவட்டங்களில் மழை

தென்மாவட்டங்களில் 11, 12 ஆகிய இரு தினங்கள் கன மழை பெய்யும் என சென்னை மண்டல ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலு,.சாத்தான்குளம்,வட்டாரப்பகுதிகளிலும்,நெல்லை மாவட்ட பகுதிகளிலும் பரவலாக காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் தற்போது கோவில்பட்டி நகர் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.கோவில்பட்டி நகர் மட்டுமின்றி அப்பனேரி கயத்தார், நாலாட்டின்புதூர் திட்டங்குளம் மூப்பன்பட்டி இலுப்பையூரணி இனாம் மணியாச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது
Tags : நெல்லை,த்துக்குடி மாவட்டங்களில் மழை