கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார் வீரபெருமாள்.

கொடநாடு வழக்கு - ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளிடம் சிபிசிஐடி விசாரணை,கொடநாடு வழக்கில் சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், கோவை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார் வீரபெருமாள்.ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜுக்கு குறுஞ்செய்தி அனுப்பியது, செல்போனை ஒப்படைக்காதது குறித்து வீரபெருமாளிடம் விசாரணை.கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இதுவரை 250 பேரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தியுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை கடந்த 2022 முதல் சிபிசிஐடி சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
Tags : கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார் வீரபெருமாள்