திமுக கூட்டணி எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து போராட்டம்

by Editor / 11-03-2025 11:13:16am
 திமுக கூட்டணி எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து போராட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மும்மொழி கொள்கையை தினிப்பதை கண்டித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒன்றிய அரசை கண்டித்து இன்று (11/03/2025) திமுக எம்.பி.க்கள் மற்றும் தமிழ்நாடு கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற முகப்பில் போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு மாணவர்களின் உரிமையை பறிக்காதே எனப் பதாகைகளை ஏந்தியும், மும்மொழி கொள்கையை ஏற்கமாட்டோம் என கோஷங்களை எழுப்பியும் முழக்கமிட்டனர்.

புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் கல்வி நிதியை மறுப்பதா? சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் ரூ.2152 கோடி நிதியை தமிழ்நாடு அரசுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

 

Tags : திமுக கூட்டணி எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து போராட்டம்

Share via