முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறுதி ஊர்வலம் தொடங்கியது

by Editor / 10-12-2021 03:50:08pm
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறுதி ஊர்வலம் தொடங்கியது

குன்னூர் அருகே நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், ராணுவ அதிகாரிகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.இதில், பிபின் ராவத் உட்பட, 13 பேர் பலியாகினர். பலத்த காயம் அடைந்த ஒருவீரர்  பெங்களூரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுசிகிச்சையில் உள்ளார். முப்படைகளின் தளபதி பிபின் ராவத்,உள்பட 13 பேர் உடல்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

பாலம் விமானநிலையத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் பிபின்ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் டெல்லியில் உள்ள அவர்களது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

 இன்று பொதுமக்கள்,ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறுதி ஊர்வலம் தொடங்கியது.இதில் பூடான்,இலங்கை,வங்கதேசம்,நேபாளம் உள்ளிட்ட பல நாட்டு ராணுவ அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

முப்படை தலைமை தளப்தி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகாவின் இறுதி ஊர்வலம்  தொடங்கியது. காமராஜ் மார்க் வழியாக டெல்லி கன் டோன்மென்ட் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படுகிறது. கன்டோன்மென்ட் மயானத்தில் இருவரின் உடல்கள் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.

 

Tags :

Share via