தென்காசி -நெல்லை இடையான மின்மயமாக்கப்பட்ட வழித்தடத்தில் சோதனை ஓட்டம்.

by Editor / 13-03-2023 09:58:11pm
தென்காசி -நெல்லை இடையான மின்மயமாக்கப்பட்ட வழித்தடத்தில் சோதனை ஓட்டம்.

தென்காசி திருநெல்வேலி திருச்செந்தூர் வரை அகல ரயில் பாதையில் மின் பாதை அமைக்க கடந்த 2020 ஆம் ஆண்டு 121 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான ஆயத்த பணிகள் விரைந்து நடைபெற்று வந்தன இதன் தொடர்ச்சியாக  2022-ல் முடிக்கப்பட வேண்டிய பணியானது, தற்போது 2023 ஆம் ஆண்டு முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.தென்காசியில் இருந்து திருநெல்வேலி வரை அகல பாதையில் மின் ரயில் பாதை அமைக்கப்பட்டு அதற்கான அதிவேக சோதனை ரயில் இயக்கம் இன்று தென்காசியில் இருந்து துவங்கியது. இதனை தென்னக ரயில்வே முதன்மை தலைமை பொறியாளர் ஏ கே.சித்தார்த்  மற்றும் தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் அனந்து உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கலந்து கொண்டு இந்த ஆய்வில் ஈடுபட்டனர். முன்னதாக தென்காசி ரயில் நிலையத்தில் பல்வேறு பகுதிகளில் அவர்கள்  ஆய்வுகள் மேற்கொண்டார்கள் முன்னதாக தென்காசி ரயில் நிலையத்தில் மேம்பாலம் பகுதியில் மின் ரயிலின் மின் சக்தியை அளவீடு செய்யப்பட்டது மேலும் அந்தப் பகுதியில் கோட்ட மேலாளர் அணந்து தலைமையில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டனர் இதன் தொடர்ச்சியாக தென்காசியில் சிறப்பு பூஜைகள் போடப்பட்டு சரியாக 3 45 மணிக்கு தென்காசி ரயில் நிலையத்திலிருந்து இருந்து இந்த ரயில் ஆறு கோச்களுடன் ஆய்வு ரயில் இயக்கம் தொடங்கியது 72 கிலோமீட்டர் மின் ரயில் பாதையில் ஒரு மணி நேரத்தில் இந்த ரயில் சென்றடைய வேண்டும் என்று கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தென்னக ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆய்வு குறித்து தென்னக ரயில்வே என்னுடைய மதுரை கோட்டை மேலாளர் அனந்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் பொழுது திருநெல்வேலி முதல் தென்காசி வரை உள்ள பாதையில் பல்வேறு கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன இதன் தொடர்ச்சியாக இன்று மின் ரெயில் இயக்கம் சோதனை நடைபெறுகிறது அதிவேகத்தில் இன்று இயக்கப்படும் சோதனை ரயில் இயக்கம் இதன் பின்னர் இதனுடைய ஆய்வு அறிக்கைகள் ரயில்வே வாரியத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் சி ஆர் எஸ் ஆய்வுகள் முடிந்த பின்னர் மின்சார ரயில் இயக்கம் வழக்கம்போல் துவங்கும் என்றும் தென்காசியில் இருந்து புனலூர் வரை உள்ள ரயில் பாதையில் மிகவும் கடினமான மலை பாதைகளாக பகவதிபுரம் முதல் இடம் வரை உள்ளதால் அந்த பணிகள் கொஞ்சம் தாமதமாகி வந்ததாகவும் தற்பொழுது வேகம் எடுத்து பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த பணிகள் முடிக்கப்படும் என்றும் செங்கோட்டை பகுதியில் மின் பாதையில் பாலம் சீராக இருப்பதாக கூறப்பட்டது தவறான தகவல் என்றும் அவர் தெரிவித்தார் மேலும் இந்த இந்தப் பாதையில் செங்கோட்டை முதல் பகவதிபுரம் வரை உள்ள பாதைகள் முதல் கட்டமாகவும்,பகவதி புரம் முதல்  எடம்மன் வரையுள்ள பாதைகள் அதிக பாலங்கள் மற்றும் வளைவுகள் கொண்ட நெருக்கடியான பாதையாக உள்ளதால் அந்தப் பணிகளும் நடைபெற்று வருகின்றன மேலும் எடமண் முதல் புனலூர் வரை உள்ள பாதை சமமான பாதையாக இருப்பதால் அந்த பணிகளும் விரைவில் முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த வருட இறுதிக்குள் செங்கோட்டை புனலூர் அகல ரயில் பாதையில் மின் பாதை அமைக்கும் பணி நிறைவு பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.தற்போது, தொடங்கப்பட்ட இந்த மின் மின்மயமாக்கல் ரயில் சேவையில் 6 பெட்டிகளை இணைத்து முதற்கட்டமாக 120 கிலோமீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டமானது நடைப்பெற்றது. 

தென்காசி -நெல்லை இடையான மின்மயமாக்கப்பட்ட வழித்தடத்தில் சோதனை ஓட்டம்.
 

Tags :

Share via