உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் வெளியீடு

by Staff / 06-01-2024 12:12:13pm
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் வெளியீடு

உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கான இலச்சினையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த மாநாட்­டின் நிகழ்ச்சி நிரல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 7ஆம் தேதி காலை 10 மணி அளவில் தமிழ்த்­தாய் வாழ்த்­து­டன் மாநாடு தொடங்­க உள்ளது. அதனைத்தொடர்ந்து, தமிழ்­நாடு தொழில்­துறை அமைச்­சர் டி.ஆர்.பி.ராஜா வர­வேற்­புரையாற்றுவார். அதன்­பின், முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் உலக முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்டை தொடங்கி வைத்து உரை­யாற்றுவார். மத்திய தொழில்­துறை அமைச்­சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்­தி­ன­ராக பங்­கேற்று உரை­யாற்­றவுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo