நகையை அடகு வைத்து கொரோனா சிகிச்சை மையத்திற்கு 100 மின் விசிறி வாங்கி கொடுத்த கோவை தம்பதி!
கொரோனா 2ம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் தினமும் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா அச்சம் காரணமாக ஏ.சி. போன்ற குளிர்சாதன பொருட்கள் பயன்படுத்துவதில்லை.
இதனால் சிகிச்சை பெறுவோருக்கு வசதியாக மின் விசிறிகளை வழங்க வேண்டும் என கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் கோரிக்கை வைத்தது. இதனை ஏற்று தமிழக அரசு சார்பில் 300 மின் விசிறிகள் முதற்கட்டமாக வழங்கப்பட்டது. இருப்பினும் கூடுதல் மின்விசிறிகள் தேவைப்படுவதாகவும் சிகிச்சைகள் முடிவடைந்த பின்னர் அதை மீண்டும் எடுத்து செல்லலாம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை கண்ட கோவையை சேர்ந்த பெயர் தெரிவிக்க விரும்பாத தம்பதியினர், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு வசதியாக மின் விசிறிகள் வழங்க முன்வந்தனர்.
இதற்காக தங்கள் நகைகளை அடகு வைத்து சுமார் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 100 மின்விசிறிகளை வாங்கி மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கியுள்ளனர். நகைகளை அடகு வைத்து மின்விசிறிகளை வாங்கி கொடுத்ததை அறிந்த மருத்துவமனை நிர்வாகம், இதுகுறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தம்பதியிடம் கோரிக்கைவைத்தனர். மேலும் மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டது.
இருப்பினும் தற்போது பெருந்தொற்றால் அவதிப்பட்டு வரும் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்வதாகவும் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தொடர்ந்து தம்பதி கூறியதால் 100 மின் விசிறிகளும் மருத்துவமனை நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இக்கட்டான சூழலிலும் நகைகளை அடமானம் வைத்து அரசு மருத்துவமனைக்கு 100 மின்விசிறிகளை வழங்கிய தம்பதிக்கு மருத்துவமனை நிர்வாகம், செவிலியர் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags :