தமிழகம் வருகிறார் கமலா ஹாரிஸ்
சமீபத்தில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.அப்போது இந்தியாவுக்கு வரும்படி இருவருக்கும் அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட கமலா ஹாரிஸ், விரைவில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அடுத்த ஆண்டு அவர் இந்தியாவுக்கு வரும்போது, தமிழகத்திற்கும் வருவார் என சொல்லப்படுகிறது. தன் பூர்வீக கிராமத்திற்கும் கமலா வருகை தரவுள்ளார்.இது தொடர்பான பூர்வாங்க வேலைகள் துவங்கி விட்டன. மிகப் பெரிய அளவில் கமலாவுக்கு தமிழகத்தில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
Tags :


















.jpg)
