இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்

by Admin / 11-10-2025 01:44:59am
இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்

இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது, இக்கூட்டத்தில் ஊர், தெரு ,ஜாதியின் பெயரால் வழங்கப்படுவதை மாற்றுவது குறித்தும் பொது நிதி ,டெங்கு காய்ச்சல் தடுப்பு என அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது

,இதுகுறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூறும் பொழுது கிராமப்புற மக்கள் தங்களின் உரிமைகளை அறிந்திடவும் தங்களின் தேவைகளை கூறி பெறுவதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் ஆறு முறை கிராமசபை கூட்டம் நடத்தப்படும் என்றும் இதற்கு மேலும் சில நேரங்களில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படலாம்

. ஜனவரி 26 மார்ச் 22 மே 1 ஆகஸ்ட் 15 அக்டோபர் 2 நவம்பர் 1 ஆகிய தேதிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் இந்த முறை அக்டோபர் 2 அன்று பெஸ்டிவல் காரணமாக அன்றைக்கு நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. கிராம சபை கூட்டத்தில் கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் பங்கேற்க வேண்டும் என்பது அரசின் அறிவுரையாக இருந்தாலும் குறைந்தபட்சம் 500  பேர் வரை கொண்ட மக்கள் தொகை உள்ள கிராமத்தில் 50 பேராவது பங்கேற்க வேண்டும் என்றும் 500 லிருந்து 300 பேர் வரை மக்கள் தொகை இருக்கிற கிராமத்தில் குறைந்தபட்சம் 100 பேராவது பங்கேற்கலாம் என நாங்கள் தெளிவுபடுத்தி இருக்கிறோம்.. தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின், இந்த நிகழ்வில் காணொளி காட்சியின் வாயிலாக நேரடியாக உரையாற்ற இருக்கிறார் என்று தெரிவித்தார்..

 

 

Tags :

Share via