ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து செயல்பட வேண்டும்: சி.டி.ரவி

by Staff / 03-02-2023 12:46:12pm
ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து செயல்பட வேண்டும்: சி.டி.ரவி

ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து செயல்பட வேண்டும் என்று பாஜக தேசிய பொதுச்செயலளார் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஈரோடு இடைத்தேர்தலில் திமுக பணபலத்தை காட்டி வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் திமுக அரசின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். திமுக தீய சக்தியாகவே உள்ளது. அதிமுக ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். திமுகவை எதிர்க்க ஒன்றிணைந்து செயல்பட அதிமுக இரு அணிகளிடமும் பேசியுள்ளோம். தமிழ்நாட்டு நலனுக்காக ஒரே வேட்பாளரை நிறுத்தி ஒன்றாக எதிர்க்க வேண்டும் என்றார்.

 

Tags :

Share via

More stories