ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ’டிக்கிலோனா’. சந்தானம் படம்: ரிலீஸ் தேதி

சந்தானம் நடித்து முடித்து திரையரங்குகளில் ரிலீஸ் ஆக தயார் நிலையில் இருக்கும் திரைப்படம் ஒன்று திடீரென ஓடிடியில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தானம் நடிப்பில் கார்த்திக் யோகி என்பவர் இயக்கிய திரைப்படம் ’டிக்கிலோனா’. ரொமான்ஸ் மற்றும் சயின்ஸ் பிக்சன் திரைப்படமான இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதமே முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இந்த நிலையில் தற்போது திரையரங்குகள் எப்போது திறக்கும் என்பது குறித்து முடிவு தெரியாததால் இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முயற்சித்து வருவதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் ’டிக்கிலோனா’ திரைப்படம் ஜீ5 ஓடிடியில் ரிலீஸாகும் என்று அறிவித்துள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 10 என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து சந்தானம் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தனம் மூன்று வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் அனைகா, ஷிரின், ஹர்பஜன் சிங், யோகிபாபு, ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, மொட்ட ராஜேந்திரன், முனிஸ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Tags :