அரசின் நிர்வாகத் தோல்வியே வெள்ளப் பெருக்குக்குக் காரணம் - சீமான்

by Staff / 06-12-2023 12:44:28pm
அரசின் நிர்வாகத் தோல்வியே வெள்ளப் பெருக்குக்குக் காரணம் - சீமான்

திமுக அரசின் நிர்வாகத் தோல்வியே சென்னை வெள்ளப் பெருக்குக்குக் காரணம் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு முறையும் மக்கள் பாதிக்கப்பட்டப் பிறகுதான், அரசு விழித்துக் கொண்டு செயலாற்றுமென்றால், அது அரசின் நிர்வாகத் திறமையின்மையும், அலட்சியமும்தான் என்பதை எவராலும் மறுக்க முடியாது. 2015ஆம் ஆண்டு அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மதிப்பிட முடியாத அளவுக்குப் பேரிழிவை எதிர்கொண்டும், இன்றுவரை அதிலிருந்து பாடம் கற்காதுவிட்டு மக்களை வெள்ளப் பாதிப்பிற்குள்ளாக்கியது திமுக அரசின் நிர்வாகத் தோல்வியாகும். இருந்தபோதிலும், தற்சமயத்தில் எல்லோரும் இணைந்து செயலாற்றினால்தான், இப்பேரிடலிருந்து முழுமையாக மீண்டு வர முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories