ஓட்டப்பிடாரம் அருகே வெறிநாய்கள் தொல்லை வெறி நாய்கள் கடித்து குதறியதில் - 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழப்பு.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் வடக்கு கைலாசபுரம். இங்கு 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் பிரதான தொழில் விவசாயம். இதற்கு அடுத்த கால்நடை வளர்ப்புதான். இந்தச் சூழ்நிலையில் இந்த கிராமத்தைச் சேர்ந்த சிவனான் மனைவி வேலம்மாள் (75) என்பவர் பத்துக்கு மேற்பட்ட ஆடு வளர்த்து கால்நடை தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று காலையில் வேலம்மாளின் மூன்று ஆட்டுக்குட்டிகளை ஐந்துக்கு மேற்பட்ட வெறி நாய்கள் கடித்து குதறியதில் மூன்று ஆடுகளும் பலியாயின.
இந்த கிராமத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட வெறிநாய்கள் சுற்றித் திரிவதாகவும், இந்த வெறி நாய்களால் கடந்த ஓரிரு மாதங்களில் 30க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகி உள்ளதாகவும், நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த பல முறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தொடர்ந்து ஆடுகள் பலியாகி வருவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
மேலும் சாலையில் பொதுமக்கள் பெண்கள் சிறுவர்கள் நடந்து செல்வதற்கு அச்சமாக இருப்பதாகவும், வெறி நாய்களால் உயிரிழந்த ஆடுகளின் உரிமையாளர்களுக்கு உரிய நிவாரண வழங்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்..
Tags : ஓட்டப்பிடாரம் அருகே வெறிநாய்கள் தொல்லை வெறி நாய்கள் கடித்து குதறியதில் - 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழப்பு.