முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று காலமானார்..

by Admin / 14-12-2024 11:32:00am
முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று  காலமானார்..

ஈரோடு சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்இன்று உடல் நல குறைவின் காரணமாக காலமானார்.. அண்மையில் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை ராமாபுரம் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் ,உடல் மோசமானதை தொடர்ந்து இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

2004 கோபிசெட்டிபாளையம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவர் காங்கிரஸ் ஆட்சி யில் ஜவுளித்துறை இணை அமைச்சராக பதவி வகித்தவர் .

தமிழ்நாட்டில் இரண்டு முறை மாநில தலைவராகவும் பதவி வகித்தவர். பெரியாரின் அண்ணன் ஈவே கிருஷ்ணமூர்த்தியின் மகனான தி.மு.கவின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த ஈ.வே.கி. சம்பத்தின் மூத்த மகன் தான் இபிகேஎஸ் இளங்கோவன். இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் பயின்றவர்.. இரண்டு முறை தேனி உட்பட சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.. இவருடைய மகன் திருமகன் ஈரோடு சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வந்த காலத்தில் இதய நோயின் காரணமாக உயிரிழந்தாா். இதன் காரணமாக ஈ வி.கே. இளங்கோவன் ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.. 75 வயதான இவர், உடல்நல குறைவின் காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் சேர்ந்திருந்தார்.. ஈரோடு சட்டமன்ற தொகுதியில் ஐந்து ஆண்டு முடிவதற்குள் மகனும் தந்தையும் சட்டமன்ற உறுப்பினராகி இறந்தது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் மிகப்பெரிய கவலையை உருவாக்கியுள்ளது..

 

Tags :

Share via