தமிழ்நாட்டில்  76 பெண் வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாக  சத்யபிரதா சாகு தகவல்.

by Editor / 18-04-2024 11:56:45pm
தமிழ்நாட்டில்  76 பெண் வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாக  சத்யபிரதா சாகு தகவல்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் நாளை ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 17 ஆம் தேதியோடு பிரசாரம் முடிவடைந்த நிலையில் நாளை 19 ஆம் தேதி வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.இந்நிலையில், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.


இது தொடர்பாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது :
“தமிழ்நாட்டில் மொத்தம் 68,321 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6.23 கோடி ஆக உள்ளது. அதில், ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.06 கோடி. மேலும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.17 கோடியாக உள்ளது. மற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை 8,467 ஆக உள்ளது.

இதையடுத்து, முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம் ஆக உள்ளது. 80 வயதுக்கு மேல் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 6,14,002 ஆக உள்ளது. மேலும், 3.32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கை  950 ஆக உள்ளது.  அதில், ஆண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 874 ஆக உள்ளது. மேலும், பெண் வேட்பாளர்கள் 76ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

 

Tags : தமிழ்நாட்டில்  76 பெண் வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாக  சத்யபிரதா சாகு தகவல்.

Share via