இன்றுமுதல் ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவில்ஆதார் அவசியம்.

இன்று முதல் ஆதார் எண்ணுடன் இணைத்துள்ள ஐஆர்சிடிசி இணையதள பயனர்களுக்கு இன்று முதல் புதிய சலுகையை ரயில்வே அமைச்சகம் வழங்கியுள்ளது.ரயில் டிக்கெட் முன்பதிவில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், ரயில்வே அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன்படி, ஐஆர்சிடிசி இணையதள கணக்கில் ஆதார் எண்ணை இணைத்தவர்களுக்கு, தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவில் முன்னுரிமை வழங்கும் திட்டம் ஏற்கனவே அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், பொதுவான டிக்கெட் முன்பதிவின்போது இன்று முதல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.அதாவது, காலை 8 மணிக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கியதும், ஆன்லைனில் முன்பதிவு செய்வோரில், முதல் 15 நிமிடங்களுக்கு ஆதாருடன் இணைத்துள்ள பயனர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரம், முன்பதிவு மையங்களுக்கு நேரில் சென்று முன்பதிவு செய்வோர், எந்த மாற்றமும் இல்லாமல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.ரயில் டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி அதிக விலைக்கு விற்கும் இடைத்தரகர்களைத் தடுக்கும் வகையில், இந்த விதி கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Tags : இன்றுமுதல் ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவில்ஆதார் அவசியம்.