கடையின் மேற்கூரை உடைத்து ரூ. 1 லட்சம் செல்போன் திருட்டு

by Staff / 16-12-2022 02:33:00pm
கடையின் மேற்கூரை உடைத்து ரூ. 1 லட்சம் செல்போன் திருட்டு

 மதுரை அரசடி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசகம் காளவாசல் பகுதியில் கடை வைத்துள்ளார்.
கடையை பூட்டிவிட்டு மறுநாள் காலை கடையை திறக்க வந்தபோது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.மேலும் அவர் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் வைத்திருந்த ரூ. 1- லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் திருடப்பட்டது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் எஸ் எஸ் காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo