தாயுமானவர் திட்ட பெயர் மாற்றம்- மூத்த குடிமக்கள் பொது விநியோகம்-வீடு தேடி பொருட்கள் வழங்கப்படுகின்றன

by Admin / 31-07-2026 06:17:43pm
தாயுமானவர் திட்ட பெயர் மாற்றம்- மூத்த குடிமக்கள் பொது விநியோகம்-வீடு தேடி பொருட்கள் வழங்கப்படுகின்றன

கடந்த திமுக ஆட்சியில் 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று மாதத்தின் முதல் வாரத்தின் குடும்ப அட்டை உடையவர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தொடங்கப்பட்டது. சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில் தற்போது  மூத்த குடிமக்கள் பொது விநியோகம் என பெயர் மாற்றப்பட்டு கூட்டுறவுத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்களில் சுற்றறிக்கையின் படி தற்போது வீடு தேடி பொருட்கள் வழங்கப்படுகின்றன. திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட விடியல் பயணம், நான் முதல்வன் திட்டம், பள்ளிகளில் காலை உணவு திட்டம் பெயர்கள் மாற்றப்பட்டது போன்று இத்திட்டத்தின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo