தடுப்பூசி குறித்து தவறான தகவல் - பிரேசில் அதிபரின் வீடியோ நீக்கம்

by Admin / 26-10-2021 03:37:28pm
தடுப்பூசி குறித்து தவறான தகவல் - பிரேசில் அதிபரின் வீடியோ நீக்கம்

தடுப்பூசி குறித்து தவறான தகவலை பரப்பிய பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் வீடியோ பதிவு பேஸ்புக் மற்றும் யூடியூப் தளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

பெருந்தொற்றுக் காலத்தில் தடுப்பூசி குறித்து தவறான தகவல்கள் மற்றும் தேவையற்ற வதந்திகளை பரப்பும் பதிவுகளை பேஸ்புக் மற்றும் யூடியூப் ஆகியவை நீக்கி வருகிறது.

அதன்படி கொரோனா தடுப்பூசி எய்ட்ஸ் நோயை ஏற்படுத்த கூடும் என்ற வகையில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ வெளியிட்ட வீடியோ பதிவு பேஸ்புக் மற்றும் யூடியூப் தளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

 இது குறித்து விளக்கமளித்துள்ள பேஸ்புக் மற்றும் யூடியூப் நிறுவனம் கொரோனா தடுப்பூசி குறித்த தங்கள் கொள்கைகளுக்கு எதிராக இருந்ததால் பதிவு நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via