36 மாதங்களுக்குள் ஏ. ஐ .தரவு மையங்களுக்கு விண்வெளி தான் மிகவும் மலிவான இடமாக மாறும் -எலோன் மஸ்க்

by Admin / 07-02-2026 02:09:21am
 36 மாதங்களுக்குள் ஏ. ஐ .தரவு மையங்களுக்கு விண்வெளி தான் மிகவும் மலிவான இடமாக மாறும் -எலோன் மஸ்க்

எலோன் மஸ்க் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று அடுத்த முப்பது முதல் 36 மாதங்களுக்குள் ஏ ஐ தரவு மையங்களுக்கு விண்வெளி தான் மிகவும் மலிவான இடமாக மாறும் என்று தெரிவித்துள்ளார். பூமியில் வளிமண்டலத்தால் 30 சதவீத சூரிய ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது ஆனால் விண்வெளியில் சூரிய ஒளி தடையின்றி கிடைப்பதால் பூமியை விட ஐந்து மடங்கு அதிக மின்சாரம் தயாரிக்க முடியும் விண்வெளியில் இரவு பகல் சுழற்சி மற்றும் மேகங்கள் இல்லாததால் மின்சாரத்தை சேமித்து வைக்க தேவைப்படும் விளைவு உயர்ந்த பேட்டியர்களின் செலவு மிச்சமாகும் பூமியில் உள்ள டேட்டா சென்டர்களை குளிர்விக்க அதிக பணம் மற்றும் தண்ணீர் செலவாகும் விண்வெளியில் உள்ள வெற்றிடம் மற்றும் கதிர்வீச்சும் மூலம் வெப்பத்தை எளிதாக வெளியேற்றலாம் பூமியில் புதிய மின் உற்பத்தி நிலையங்களை கட்டுவதற்கு பல ஆண்டுகள் ஆகும் ஆனால் அதில் சட்ட சிக்கலும் உள்ளது ஆனால் விண்வெளியில் அத்தகைய தடைகள் இல்லை என்று மஸ்க் சொல்கிறார். இதற்காக அவரது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார் லிங்க் செயற்கை கோள்களை மேம்படுத்தி விண்வெளிய டேட்டா சென்டர்களை உருவாக்கும் திட்டத்தை fcc யிடம் சமர்ப்பித்துள்ளது. மஸ்கின் கணிப்பு படி ஐந்து ஆண்டுகளுக்குள் பூமியில் இருப்பதைவிட அதிக ஏயை விண்வெளியில் இயங்கும்.

 36 மாதங்களுக்குள் ஏ. ஐ .தரவு மையங்களுக்கு விண்வெளி தான் மிகவும் மலிவான இடமாக மாறும் -எலோன் மஸ்க்
 

Tags :

Share via

More stories