சிவாஜி கணேசன்  94வது பிறந்தநாள்:  மணிமண்டபத்தில் ஸ்டாலின் மரியாதை

by Editor / 01-10-2021 03:27:51pm
சிவாஜி கணேசன்  94வது பிறந்தநாள்:  மணிமண்டபத்தில் ஸ்டாலின் மரியாதை



நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை ஒட்டி அவரது மணிமண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94வது பிறந்தநாள்  கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 10 மணி அளவில் அங்கு சென்று மணிமண்டபத்தில் உள்ள சிவாஜி கணேசனின் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாறு குறித்த மடிப்பேட்டினை ஸ்டாலின் வெளியிட்டார்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சிவாஜியின் மகன்கள் ராம்குமார், பிரபு, பேரன் விக்ரம் பிரபு மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் வரவேற்றனர். சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு மணிமண்டபத்தில் உள்ள சிவாஜியின் ஒவ்வொரு புகைப்படங்களையும் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அவருக்கு கவிஞர் வைரமுத்துவும், பிரபுவும் புகைப்படங்கள் பற்றி விளக்கி கூறினார்கள்.


நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., மயிலை வேலு எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.
தல்வர் வருகைக்கு நடிகரும் சிவாஜியின் மகனுமான பிரபு நன்றி தெரிவித்தார்.

 

Tags :

Share via