இந்தியை திணிக்கவில்லை என கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் - தி.க.தலைவர் கி.வீரமணி

மத்திய அரசு தரக்குறைவான அரசியலை செய்து வருவதாகவும், தமிழ்நாடு அரசை நேரடியாக எதிர்க்க முடியாமல் மறைமுகமாக அச்சுறுத்துவதாகவும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.மும்மொழி கொள்கை மூலம் இந்தியை திணிக்கவில்லை என்று மத்திய அரசு கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து, பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி, மத்திய அரசு மும்மொழி கொள்கை மூலம் இந்தியை திணிக்கவில்லை என்று கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்று சாடினார்.
Tags :