தமிழ்நாட்டில் இதுவரை 1,958 நூலகங்களுக்கு வைஃபை வசதி : அமைச்சர் அன்பில் மகேஸ் பெய்யாமொழி

by Editor / 11-12-2024 10:53:29am
தமிழ்நாட்டில் இதுவரை 1,958 நூலகங்களுக்கு வைஃபை வசதி : அமைச்சர் அன்பில் மகேஸ் பெய்யாமொழி

தமிழ்நாட்டில் இதுவரை 1,958 நூலகங்களுக்கு வைஃபை வசதி செய்து தரப்பட்டுள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பெய்யாமொழி தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே முதன்முறையாக ஆன்லைன் வாசிப்பை கொண்டு வந்தது தமிழ்நாடு அரசுதான் என்றும் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், தென்காசி மாவட்டங்களில் மைய நூலகங்கள் அமையவுள்ளது என்றும் அன்பில் மகேஷ் குறிப்பிட்டுள்ளார். 4 மாவட்டங்களில் அமையவுள்ள மைய நூலகங்களுக்கு தலா ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் குறிப்பிட்டார்.

 

Tags : தமிழ்நாட்டில் இதுவரை 1,958 நூலகங்களுக்கு வைஃபை வசதி : அமைச்சர் அன்பில் மகேஸ் பெய்யாமொழி

Share via