மேம்பாலத்தில் இருந்து குதித்து ஐடி ஊழியர் தற்கொலை

சென்னை குரோம்பேட்டை சாந்தி நகரை சேர்ந்த ஐடி ஊழியர் பாலாஜி இன்று (ஆகஸ்ட் 7) காலை வீட்டில் இருந்து தனது பைக்கில் புறப்பட்டு, மீனம்பாக்கம் மேம்பாலத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்து திடீரென மேம்பாலத்தின் மேலே இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார். இதையடுத்து, பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :