அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை

சென்னை: டிபிசத்திரம் பகுதியில் அதிமுக பிரமுகரும், முன்னாள் ரவுடியுமான புல்கான் எனும் ராஜ்குமார் நேற்று வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், ராஜ்குமாரை ஹெல்மெட் அணிந்து வந்த கும்பல் வெட்டிக் கொல்வதற்காக விரட்டிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கில் யுவனேஷ் என்ற கல்லூரி மாணவர், சாய்குமார், 17 வயது சிறுவன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tags :