வாஷிங்டனில் இந்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் செய்தியாளரை கடுமையாக தாக்கினர்

by Writer / 27-03-2023 11:34:58am
 வாஷிங்டனில் இந்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் செய்தியாளரை கடுமையாக தாக்கினர்

 அமெரிக்க வாஷிங்டனில் இந்திய தூதரகம் முன்பாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் திரளாக கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்வு குறித்து செய்தி சேகரிப்பதற்காக சென்ற செய்தியாளர் லலிக்கே ஜாவை சம்பவ இடத்தில் செய்தி சேகரித்துக் கொண்டிருதபொழுது  காலிஸ்தான் ஆதரவாளர்கள் அவரை கடுமையாக தாக்கினர்  இதை அறிந்த காவல்துறையினர் அவரை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தனர் இந்திய பத்திரிகையாளர் மீது நடந்த இந்த தாக்குதலுக்கு அமெரிக்க இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது  பஞ்சாப் காலிஸ்தான் பிரிவினைவாதி ஆன அம்ரித் பால் சிங்கை இந்திய காவல்துறையினர் கைது செய்வதற்காக தீவிரமாக முயன்று கொண்டிருக்கின்ற நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் வசிக்கின்ற காலிஸ்தான் தீவிரவாதி அமைப்பினரும் வெளிநாடுகளில் இருக்கின்ற  காலிஸ்தான் ஆதவாளர்களும் இதுபோன்ற போராட்டங்களை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via

More stories