இன்று கோபிசெட்டிபாளையத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

by Admin / 30-11-2025 08:42:22pm
இன்று கோபிசெட்டிபாளையத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

இன்று கோபிசெட்டிபாளையத்தில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கினார். இன்று மாலை 5.00 மணி அளவில்  பொதுக்கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் இப்பொழுது இருப்பதைவிட கோபிசெட்டிபாளையம் நன்கு வளர்ச்சி அடையும் என்கிற வாக்குறுதியை அளித்தார். இந்தத் தொகுதி முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையனின் சொந்த தொகுதியாகும் சமீபத்தில் அவர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் தன்னை இணைத்துக் கொண்டார். அத்துடன் அவர் தன்னோடு சார்ந்தவர்களையும் கட்சியில் இணைத்ததோடு தற்பொழுது கோபிசெட்டிபாளையத்தில் முகாமிட்டு தமக்கு நெருங்கிய முன்னாள் அமைச்சர்கள் ,கட்சி பிரமுகர்களை தமிழக வெற்றி கழகத்தில் இணைப்பதற்கான செயலில் ஈடுபட்டுள்ளார். அவரின் இந்த செயலை முறியடிப்பதற்காக கோவை செட்டி பாளையத்தில் பிரம்மாண்ட முறையில் மாபெரும் பொதுக்கூட்டத்தை அதிமுக சார்பாக கூட்டி தங்கள் கட்சி பலத்தை அதிமுக மீண்டும் நிரூபிக்கும் முகமாக இந்த கூட்டம் நடைபெற்றது.. கூட்டத்தில் அதிமுக தொண்டர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

 

 

Tags :

Share via